விசிகவை தொடர்ந்து மதிமுகவும் சரண்டர்... திமுகவுடன் தொகுதி உடன்பாட்டுக்கு தயாராகும் வைகோ..?

By Asianet TamilFirst Published Mar 4, 2021, 10:00 PM IST
Highlights

விடுதலை சிறுத்தைகள் பாணியில் மதிமுகவும் திமுகவுடன் தொகுதி உடன்பாட்டை செய்துகொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

திமுக கூட்டணியில் மதிமுகவுடனான தொகுதி பங்கீடு இழுபறியாகவே உள்ளது. கூட்டணியில் மதிமுக 12 தொகுதிகளைக் கேட்டு வருகிறது. ஆனால், 6 அல்லது 7 தொகுதிகள் வரை வழங்குவதாக திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கட்சியின் அங்கீகாரத்துக்காக 12 தொகுதிகள் தேவை என்பதிலும், தனி சின்னத்தில் போட்டியிடுவதிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திமுகவுடன் மதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது.

 
பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. இரு கட்சிகளிடையே எந்தப் பிணக்கமும் இல்லை. திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் 200 சதவீதம் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்தார். திமுக வழங்க உத்தேசித்துள்ள தொகுதிகளைப் பெற மதிமுக தயக்கம் காட்டி வந்தது. இதேபோல  தயக்கம் காட்டிவந்த விசிக, பின்னர் திமுகவுடன் தொகுதி உடன்பாட்டை முடித்துகொண்டது. இந்நிலையில் திமுக வழங்க முன்வந்துள்ள தொகுதிகளைப் பெற்று ஒப்பந்தத்தில் மதிமுகவும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!