துபாயில் உயிரிழந்த தமிழர்..! விடாமல் முயன்று உடலை தமிழகம் வரவழைத்த வைகோ...!

By Manikandan S R SFirst Published Apr 23, 2020, 8:34 AM IST
Highlights

துரைராஜின் உறவினர்கள் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவிடம் தகவல் தெரிவித்து உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவும்படி கோரிக்கை விடுத்தனர். உடனடி நடவடிக்கையில் இறங்கிய வைகோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்ப்பு கொண்டு சம்பவம் குறித்து எடுத்துரைத்தார். 

விருதுநகர் மாவட்டம் வத்திறாயிருப்பு அருகே இருக்கிறது மகராஜபுரம் கிராமம்.இந்த ஊரைச் சேர்ந்தவர் துரைராஜ் (45). துபாயில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் அவ்வபோது ஊருக்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் 17ம் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி துபாயிலேயே துரைராஜ் மரணமடந்தார். இதையறிந்து ஊரில் இருக்கும் அவரது குடும்பத்தினர் கதறி துடித்தனர். அவரது உடலை இந்தியா அனுப்புவதற்கான முயற்சிகளை அவர் வேலை செய்த நிறுவனமும் அங்கிருக்கும் தமிழ் அமைப்புகளும் மேற்கொண்டன. ஆனால் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரமாகவே உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனிடையே துரைராஜின் உறவினர்கள் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவிடம் தகவல் தெரிவித்து உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவும்படி கோரிக்கை விடுத்தனர். உடனடி நடவடிக்கையில் இறங்கிய வைகோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்ப்பு கொண்டு சம்பவம் குறித்து எடுத்துரைத்தார். துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து துபாயில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் அங்கிருக்கும் தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு துரைராஜ் உடலை இந்தியா அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

கவலைபடாதீங்க தம்பி.. அம்மா நல்லா இருக்காங்க..! பணியில் இருக்கும் ராணுவ வீரருக்கு தைரியம் கூறிய எடப்பாடி..!

அதன்படி எமிரேட்ஸ் வான் ஊர்தி மூலம் துரைராஜ் உடல் நேற்று இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்த துரைராஜின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்குகள் செய்ய உள்ளனர். தமிழர் ஒருவர் துபாயில் பணியின் போது மரணமடந்த நிலையில் வைகோவின் தீவிர முயற்சியில் ஒரு மாதத்திற்கு பிறகு உடல் சொந்த ஊருக்கு வருவது அவரது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

click me!