
மதிமுக பொது செயலாளர் வைகோவின் தந்தை வையாபுரி கடந்த 1973ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி காலமானார். இதையொட்டி, ஆண்டு தோறும் ஏப்ரல் 5ம் தேதி வைகோ, மவுன விரதம் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தனது தந்தையின் நினைவு தினமான இன்று, தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் உள்ள வைகோ, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மவுன விரதம் மேற்கொண்டு வருகிறார்.
காலை முதல் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பதால், சிறைச்சாலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.