உள்ளாட்சி தேர்தலை நடத்த எங்களுக்கு பயம் இல்லை - வைகைசெல்வன் ஸ்டாலினுக்கு சுளீர்...

 
Published : Apr 04, 2017, 09:48 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
உள்ளாட்சி தேர்தலை நடத்த எங்களுக்கு பயம் இல்லை - வைகைசெல்வன் ஸ்டாலினுக்கு சுளீர்...

சுருக்கம்

Local elections are not afraid of us - vaikaicelvan Stalin culir

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் அதிமுக அம்மா அணிக்கு இல்லை என அதிமுக அம்மா அணியின் ஆதரவாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை மே மாதத்திற்குள் நடத்த வேண்டும் எனவும் அவ்வாறு நடத்தா விட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தோல்வி பயத்தின் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை ஆளுங்கட்சி தள்ளி போடுகிறது என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக அதிமுக அம்மா ஆதரவாளர் வைகை செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அனைத்து மாநகராட்சிகள் உள்பட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.

எனவே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் அதிமுக அம்மா அணிக்கு இல்லை என மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சிக்கல்கள் இருக்கலாம். அது அவர்களின் நிலைப்பாடு. தேர்தலுக்கு அரசு எப்போதுமே அஞ்சியது கிடையாது என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்