பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி ம.தி.மு.க. சார்பில் தஞ்சை மாவட்டத்தில் வருகிற 16-ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திருச்சி சென்றார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாளை வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் நடைபெறும் பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள் விழா மாநாடு மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து இரவு 7.30 மணிக்குள் முடிவடைய இருக்கிறது. இந்த மாநாட்டில் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா அவர்கள் வழியில் தமிழக மாநில வாழ்வாதரத்தை காப்பதற்கு சில முக்கிய முடிவுகளை பிரகடனப்படுத்துவதாக உள்ளதாக தெரிவித்தார்.அதாவது தஞ்சை மாநாட்டில் புதிய கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க உள்ளதாக மக்கள் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார் மேலும், பசுமை தீர்ப்பாயம் குறித்த வழக்கிற்கு நீதிமன்றம் சென்றால், தமிழக மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொண்ட மோடி, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தை நிரந்தரமாக மூடி விட முயற்சிப்பதாக கூறினார்.வைகோவின் இந்த பேச்சால், வைகோ யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது