செரீனா வில்லியம்ஸ் தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள். உலகையே மூக்கின் மீது விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு 23 முறை கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை அவர் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.இதுவரை ஒரு வீராங்கனையாக மட்டும் நம் கண்ணிற்கு தெரிந்தவர் தற்போது ஒரு தாயாக தெரிகிறார். அதாவது கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியன்று, செரீனா வில்லியம்சிற்கு பெண் குழந்தை பிறந்தது பிறந்த பெண்குழந்தையுடன் தான்அரவணைத்து எடுத்துக்கொண்ட, ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் செரினா வில்லியம்ஸ்.செரினா வில்லியம்ஸுக்கும் - ரெட்டிட் துணை நிறுவனருமான அலெக்ஸிஸ் ஒஹானியன்வும் கடந்த 2016, டிசம்பர் 29ம் தேதி திருமணம் நடந்தது. இதனை தொடர்ந்து தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள செரீனா, அவருடைய குழந்தைக்கு அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஒஹானியன் என பெயர் வைதுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.சமூக வலைத்தளத்தில் தற்போது இந்த புகைப்படம் தான் செம ட்ரென்டிங்..