குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவுதடை செய்யப்பட்ட குட்காவை, சட்டவிதிகளை மீறி சட்டப்பேரவைக்கு கொண்டு வந்ததாக, ஸ்டாலின் உள்பட 21 பேர் மீது உரிமை மீறல் குழு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக பதில்அளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இது தொடர்பாக தங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என ஸ்டாலின் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தற்போது, மறு உத்தரவு வரும் வரை, ஸ்டாலின் உட்பட 21 பேர் மீது எந்த நடவடிக்கை எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் வழக்கை அக்டோபர் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் ஆளும் கட்சியில், உட்கட்சி பூசலால் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், எதிர்கட்சியான திமுக தொடர்பான வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது