திமுக செயல் தலைவர் மு.கஸ்டாலினை, பாஜாக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்கு முன்னதாக, சாரணர் இயக்கத்தலைவராக எச்.ராஜாவை தேர்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல கருத்துக்களை வெளியிட்டவர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்நிலையில் தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக திமுக செயல் தலைவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளதாக எச்.ராஜா தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு, இவர்கள் இருவரின் சந்திப்பு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், எச்.ராஜா மற்றும் ஸ்டாலின் இவர்கள் இருவரின் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.