தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்தற்போது நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்று உள்ளதாக தெரிவித்து உள்ளனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதுஇதே நேரத்தில் சபாநாயகருடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு கொறடா ஆலோசித்து வருகின்றனர்.மேலும் பரப்பரபான அரசியல் சூழ்நிலையில், தினகரன் அடுத்தக்கட்ட முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அதாவது டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் ஆதரவாளர்கள் மனு அளித்துள்ளனர்.ஒரு புறம் எடப்பாடியின் அதிரடி முடிவுகள்,மற்றொரு பக்கம் தினகரனின் விடா முயற்சி என தொடந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக எந்த முடிவுகள் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருகின்றனர்