சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்பு, பெங்களூர பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தமிழக முதல்வராக எடப்பாடி அரசு பொறுப்பேற்றது.இதனை தொடர்ந்து, செல்லூர் ராஜு, காமராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், சிறையில் இருந்த சசிகலாவை சந்தித்தனர். எனவே, சசிகலாவின் வழிநடத்தலின் படிதான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என எதிர்த்து, இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் ஆணழகன் என்பவர் வழக்கை தொடுத்தார்இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது அப்போது முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களின் சார்பாக விளக்கம் அளிக்கப் பட்டதுமுதல்வர் தரப்பு விளக்கம்ரகசிய காப்பு பிரமாணம், அரசியலமைப்பு எதிராக தான் செயல்படவில்லை எனவும், பெங்களூரு சென்று, சசிகலாவின் உடல் நலம் குறித்து மட்டுமே விசாரித்தனர் எனவும் தெரிவித்தனர்.மேலும் அந்த சந்திப்பு ஒரு மரியாதையை நிமித்தமாகத்தான் தாங்கள் மேற்கொண்டதாக கூறினர்.இதனை தொடர்ந்து இன்று முதல்வர் மற்றும் அமைச்சர்களின் விளக்கத்தை கேட்டு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.