சசிகலாவின் கணவர் சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரை பார்ப்பதற்கு அவருடைய மனைவி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வருவாரா என்றக் கேள்வி எழும்பியுள்ளது.அதாவது, நடராஜனின் சில உடல் உறுப்புக்கள் மிகவும் பாதிக்கப் பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவரை பார்ப்பதற்காக சசிகலா பரோலில் வெளிவருவார் என பலரும் எதிர்பார்கின்றனர்.இதற்கு முன்னதாக, சசிகலா ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம், தன் அண்ணன் மகன் மகாதேவன் மரணத்திற்கும், தன் அண்ணி சந்தானலட்சுமி மறைவிற்கும் பரோல் வேண்டி விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு பரோல் வழங்க அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், தொடர் சிகிச்சை எடுத்து வரும், நடராஜனை பார்பதற்காக பரோலில் வெளிவர அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சசிகலா ஒருவேளை வெளியே வந்தால், அரசியல் வட்டாரத்தில் மேலும் ஒரு பரபரப்பு காணப்படும்