தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில்குறிப்பாக சசிகலாவின் பொதுசெயலாளர் நியமனம் ரத்து, இரட்டை இலையை மீட்போம் என உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இது குறித்து தினகரன் கருத்து தெரிவித்தார்.அப்போது நான் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் வழக்கின் தீர்ப்பின் பிறகே பொதுக்குழு செல்லுமா என தீர்மானிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.மேலும், ஜெ அமர்ந்த நாற்காலியில் எடப்பாடி அமர்வதை யாரும் விரும்பவில்லை எடப்பாடி கூடத்தின் சட்டப்படி செல்லாதுசசிகலாவிற்கு ops eps துரோகம் செய்து விட்டனர்துரோகமும் துரோகமும் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சி நடத்துவதை மக்கள் விரும்பவில்லைஅவர்களுக்கு தேர்தலில் நிற்க பயம் ....அவர்களுக்கே தெரியும், அவர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாதுபதவியை காப்பாற்றிக்கொள்ளவே அவர்களுடன் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்இந்த ஆட்சி வீட்டிற்கு சென்றதும்,அனைவரும் என்னிடம் வருவார்கள்மேலும் , நான் எங்கு சென்றாலும், என்னிடம் பொதுமக்கள் கூறுவது என்னவென்றால், " உங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது, உங்களால் தான் கட்சியை காப்பாற்ற முடியும், நீங்கள் ஆள்வதையே மக்கள் விரும்புகின்றனர் என மக்கள் அவரிடம் தெரிவித்ததாக தினகரன் தெரிவித்தார்