பொதுக்கூடத்திற்கு உச்சநீதிமன்றம் தடை போடவில்லை.அதனால் பொதுக்கூட்டம் நடைபெறும், அனைவரும் வாங்க என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்தார்.நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தில் எந்த போராட்டத்திற்கும் அனுமதி கிடையாது என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்து இருந்தது.இந்நலையில், முன்னதாகவே திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மத்திய மாநில அரசுக்கு எதிரான திமுக கண்டன பொதுக்கூட்டம், இன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் திடீரென நீட் தேர்வு தொடர்பாக எந்த போராட்டமும் நடத்த கூடாது என இன்று தெரிவித்ததால், கூட்டம் நடைபெறுமா ? நடைபெறாதா என சந்தேகம் எழுந்தது.ஸ்டாலின் அதிரடிஇது தொடர்பாக பேசிய ஸ்டாலின், திட்டமிட்டப்படி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அதிரடியாக தெரிவித்தார்.மேலும் "பொதுக்கூட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை போடவில்லை" அதனால் பொதுக்கூட்டம் நடைபெறும், அனைவரும் வாங்க என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்