தமிழகத்தில் நிலவும் பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில், மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக நடிகர் கமல்ஹாசன் தான் புதியதாக தொடங்க உள்ள கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதுஅதாவது தற்போது தமிழகத்தில் நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழலில் நடிகர் கமல் ஹாசன் அரசியலில் குதிக்க உள்ளதாக சமீபத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது இந்நலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக கூட, தன்னுடைய அரசியல் வாடையை காண்பித்து வந்தார் கமல். மேலும், சமீபத்தில் கோவையில் நடைப்பெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் கமல், தேவைப்பட்டால் கோட்டையை நோக்கி செல்வேன் என தெரிவித்து இருந்தார்.இந்நலையில் கமல் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், வரும் 17 (செ.17 )ஆம் தேதி கமல் தொடங்கவிருக்கும் கட்சியின் பெயரை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் காரணமாக கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்