நீட்தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதா உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் மாணவர்கள் ,பொதுமக்கள், சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினர், நீட் தேர்வை எதிர்த்தும் மத்திய மாநில அரசை கண்டித்தும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்இந்நிலையில், மாணவி அனிதாவின் மரணத்திற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென கூறி , முதல்வரை சந்தித்து புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார்.இதனை தொடந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி சில கருத்துக்களை முன்வைத்தார்அனிதாவின் மரணத்திற்கு பின், ஏதாவது தூண்டுதல் இருக்கிறதா ?அனிதாவின் மரத்திற்கு பின், அரசியல் பின்னணி ஏதாவது உள்ளதா?திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை, மாணவி அனிதா சந்தித்து மனு கொடுத்தது ஏன் வெளிச்சத்திற்கு வரவில்லை எனவும்,மாணவி அனிதா உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்வதற்கு திமுக உதவியதாகவும் தெரிவித்துள்ளார்மேலும் அனிதாவின் மரணம் கொலையா? தற்கொலையா? என கண்டறியவும், இதற்கு முன்னதாக தமிழகத்தில் நடைப்பெற்ற சில கொலைகள், தற்கொலையாக சித்தரிக்கப்பட்டவை எனவும் கருத்து தெரிவித்துள்ளார் கிருஷ்ணசாமி கீழ்த்தரமான அரசியலை செய்ய மாணவி அனிதாவின் மரணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, தான் கருதுவதால் நீதி விசாரணை வேண்டுமென முதல்வரை சந்தித்து மனு கொடுத்துள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்