நீட் தேர்வை எதிர்த்து, வரும் 9 ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கண்டன ஆர்பாட்டம் நடத்தப்போவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.ஜெயலலிதா மறைவிற்கு பின், அதிமுக கட்சி இரண்டாக பிளவுப் பட்டது. அதில் ஒன்று ஒபி எஸ் அணி மற்றும் சசிகலா அணியினர். அதிமுக அணி இரண்டாக பிளவு பட்டதற்கு காரணம் திமுக தான் என தொடக்கத்திலிருந்தே தினகரன் கருத்து தெரிவித்து வந்தார். அதாவது மத்திய அரசை எதிர்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர், சசிகலாவை குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்பு, அவர் ஜெயிலுக்கு சென்றார். இதனை தொடர்ந்து நடைப்பெற்ற காலியாக இருந்த ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பிலிருந்து எடப்பாடி ஆதரவுடன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார் தினகரன். இவருக்கு எதிராக பன்னீர் செல்வம் அணியிலிருந்து மதுசூதனன் போட்டியிட்டார். சின்னம் முடக்கம் - தேர்தல் ஒத்திவைப்புஅதாவது இரண்டு அணியினரும் ஒரே சின்னத்திற்கு போட்டியிட்டது. எனவே இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதன் பின்னர் தொப்பி சின்னத்தில் தினகரனும், இரட்டை மின்விளக்கு சின்னத்தில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.பின்னர் ஓட்டுக்காக தினகரன் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் தினகரனும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றார். இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த தினகரன், குடியரசுத்தலைவர் தேர்தல் வந்தபோது, மத்தியில் ஆளும் பா.ஜ.க விற்கே ஆதரவு தெரிவித்து வந்தார் இரு அணைகள் இணைப்புஇந்நலையில் EPS,OPS அணிகள் இணையும் தருவாயில் தனி அணியாக சென்றது தினகரன் அணி. பின்னர் EPS,OPS அணிகள் இணைந்த பிறகு, எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வத்திற்கு எதிராக, தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேரும் புதுவையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கி, எடப்பாடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்அனிதா மரணம்நீட்தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதா உயிரிழந்ததையடுத்து, நேரில் சென்று அஞ்சலி செலுத்திய டிடிவி தினகரன், தற்போது அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், நீட் தேர்விற்கு எதிராகவும் வரும் 9 ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கண்டன ஆர்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கும் டிடிவிமுன்னதாக மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த டிடிவி, தற்போது நீட் விவகாரம் மூலமாக நேரடியாக மத்திய மாநில அரசுகளை எதிர்க்க முடிவு செய்துள்ளார். மக்களையும் தொண்டர்களையும் மட்டுமே தான் நம்பி இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மேலும் வரும் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டம் மூலமே தினகரனுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள மற்ற அரசியல் கட்சியினர் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது