சென்னை அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமயில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், 109 எம்எல்ஏக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்அதிமுகவின் 135 எம்எல்ஏக்களில், 21 எம்எல் ஏக்கள் மட்டுமே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக உள்ளனர்.இவர்கள் யாரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எஞ்சிய 114 இல் கருணாஸ் உள்ளிட்ட 3 எம்எல் ஏக்கள் அதிமுக கூட்டணி கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கதுகூட்டணி கட்சியினர் 3 பேர், சபாநாயகர் மற்றும் தமிழ்ச்செல்வன் தவிர்த்து மற்ற எம்எல் ஏக்களான 109 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்இந்த கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிந்த தீர்மானத்திற்கு 109 எம்எல்ஏக்களும் எடப்பாடிக்கு முழுமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முதல்வராக செயல்படவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதி முடிவு என அதிமுக எம்எல் ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதுதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்களுடன் இணைந்து பணியாற்ற எடப்பாடி அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் ஒரு வேளை இணைந்து பணியாற்ற வரவில்லை என்றால் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது எனவும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது