சென்னை அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமயில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், இதுவரை 109 எம்எல்ஏக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.மேலும் இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் கலந்துக்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி , துணை முதல்வர் பன்னீர் செல்வம், மாபா பாண்டியராஜன், தங்கமணி , வேலுமணி மற்றும் மற்ற எம்எல்ஏக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்அதிமுகவின் 135 எம் எல் ஏக்களில், 21 எம் எல்ஏக்கள் மட்டுமே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக உள்ளனர். எஞ்சிய 114 இல் கருணாஸ் உள்ளிட்ட 3 எம்எல் ஏக்கள் அதிமுக கூட்டணி கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது கூட்டணி கட்சியினர் 3 பேர் ,சபாநாயகர் மற்றும் தமிழ்ச்செல்வன் தவிர்த்து மற்ற எம் எல் ஏக்கள் 109 பேர் கூட்டத்தில் பங்கேற்று எடப்பாடிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினர்