அரசியலுக்கு வருவதை ஒப்புக்கொண்ட கமல்தமிழக அரசியலில் கால் பதிக்க இதுதான் சரியான நேரம் என்பதை புரிந்துக் கொண்ட கமல் , இதுவரை அரசியல் சார்ந்த கருத்துக்கு அமைதியாக இருந்தவர் தற்போது ஒரு ஸ்டெப் மேல வந்துள்ளார்அதன்படி, தனியார் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் போதும் சரி , பொது இடங்களில் பேசும் போதும் சரி அரசியலை பற்றி நிறைய கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.அதாவது மக்கள் மனதில் எந்த அளவிற்கு கமலுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வதற்கு இதெல்லாம் ஒரு வாய்ப்பு. இந்நிலையில் நேற்று கோவையில் ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்த கமல் இது திருமண விழா அல்ல , இது ஆரம்ப விழா என கூறினார் . அதாவது கட்சி தொடங்க பிள்ளையார் சுழி போட்டுள்ளார்மேலும், தமிழ் நாடு அரசியலை பற்றி பேசும் போது, ஓட்டுக்காக பணத்தை பெற்று திருடர்களை ஆட்சி செய்ய அனுமதித்து விட்டோம், இனி அப்படியில்லாமல் மக்களுக்காக நல்ல அரசாக மாற்ற வேண்டியது நம் கடமை என கமல் கூறினார்.தேவைப்பட்டால் சென்னை கோட்டைக்கு செல்வேன் எனவும் கூறினார். ஒட்டுமொத்தத்தில் அரசியலுக்கு வருவதை தெளிவாக கூறியுள்ளார் கமல்