தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில்குறிப்பாக சசிகலாவின் பொதுசெயலாளர் நியமனம் ரத்து, இரட்டை இலையை மீட்போம் என உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இது குறித்து தினகரன் கருத்து தெரிவித்தார்.அதில், சசிகலாவிற்கு ops eps துரோகம் செய்து விட்டனர்துரோகமும் துரோகமும் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சி நடத்துவதை மக்கள் விரும்பவில்லைஅவர்களுக்கு தேர்தலின் நிற்க பயம் ...அவர்களுக்கே தெரியும், அவர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது என தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவது என்னுடைய நோக்கம் என ஆணித்தரமாக கருத்து தெரிவித்தார்.திமுகவிற்கும் எனக்கும் தான் போட்டிஇதற்கிடையே, எனக்கும் திமுகவிற்கும் தான் போட்டி எனவும், தற்போது ஆட்சி நடத்தும் துரோகிகள் எல்லாம் எனக்கு ஒரு ஜுஜுபி என தெரிவித்தார்.ஆக மொத்தத்தில், தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம் எல் ஏக்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள் என்ற நிலை தான் ஏற்பட்டுள்ளது