"கேரி பேக்"கிற்கு 6 ரூ வசூல்...! நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் பிரபல தனியார் நிறுவனத்தில் கேரி பேக் வழங்கியதற்கு ரூ.6 வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்துகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு குறித்த விசாரணை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சேவைகுறைபாட்டால் இந்த வழக்கை தொடர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கு, மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதுஎனவே, மன உளைச்சல் அடைந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கு ரூ.8000 ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என ஆணையிட்டார். ஒருவேளை குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை வழங்கவில்லை என்றால், 6% வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்