மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்குவதா..? கொந்தளித்த வைகோ!

By Asianet TamilFirst Published Jan 10, 2020, 10:14 AM IST
Highlights

பெரியார் சிலையை உடைப்பது போன்ற கேடான செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது. அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த காவல் பாதுகாப்பை விலக்கிக்கொண்ட தமிழக அரசுக்கும், அதற்கு ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்று வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுவந்த இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுவந்த இசட் பிளஸ் பாதுகாப்பு முறைப்படி விலக்கிக்கொள்ளப்பட உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக கூட்டணி கட்சியான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுவந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு விலக்கிக்கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை. தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா லட்சியங்களுக்கு எதிராக, திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலின் சரியான எதிர்ப்பைக் காட்டி வருகிறார். மக்கள் செல்வாக்கு அவருக்கு நாளும் அதிகரித்து வருகிறது.

click me!