3 மருத்துக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்... வைகோ கண்டனம்!!

By Narendran S  |  First Published May 28, 2023, 5:51 PM IST

சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட மூன்று மருத்துக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 


சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட மூன்று மருத்துக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்நடவடிக்கையால் இந்த மூன்று கல்லூரிகளில் நடப்பு ஆண்டில்  மருத்துக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடை படும் நிலைமை உருவாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: யார் இந்த அசோக்குமார்.?செந்தில் பாலாஜி சகோதரரின் முழு பின்னனி என்ன.? வருமான வரி சோதனையில் ஆவணங்கள் சிக்கியதா.?

Tap to resize

Latest Videos

சென்னை ஸ்டான்லி,  திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும மாணவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ- மெட்ரிக் வருகைப் பதிவு, சிசிடிவி கேமராக்கள் போன்றவை முறையாக இல்லாததும், பராமரிக்கப்படாததும் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்குக் காரணம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. மேற்கண்ட மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை இரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது. 

இதையும் படிங்க: சிறுமிகளிடம் இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை.! ஆளுநரிடம் திங்கட்கிழமை அறிக்கை- குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

மிகச் சதாரணமான காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்கி வரும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை முடக்க ஒன்றிய பாஜக அரசு முனைந்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். இதனை நியாயப்படுத்தவே முடியாது. எனவே ஒன்றிய அரசு, சென்னை ஸ்டான்லி, திருச்சி,தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை இரத்து செய்யும் முடிவை கைவிட வேணடும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!