சிறுமிகளிடம் இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை.! ஆளுநரிடம் திங்கட்கிழமை அறிக்கை- குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

By Ajmal KhanFirst Published May 28, 2023, 2:47 PM IST
Highlights

சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை,  சிறுமிகள் கொடுத்த ஆடியோ வீடியோ வாக்குமூலங்கள் ஆணையத்தில் உள்ளது திங்கள்கிழமை ஆளுநரையும் அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆர் ஜி ஆனந்த் தெரிவித்துள்ளார். 

குழந்தை திருமண விவகாரம்

சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக ஆளுநர் ரவி புகார் தெரிவித்து இருந்தார். இதனை மறுத்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, மாணவிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்படவில்லையென தெரிவித்தார். இதனையடுத்து தமிழக அரசுக்கு குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய  உறுப்பினர் சிதம்பரம் கோயிலில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.அப்போது மாணவிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்படவில்லையென கூறியதாக தகவல் வெளியானது. இந்த செய்தி வெளியான நிலையில் நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

இரு விரல் பரிசோதனை

இந்தநிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆர் ஜி ஆனந்த், சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரத்தில் ஆணையத்தின் 132 பக்க அறிக்கையை வெளியிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரிவித்தார். சிதம்பரம் கோயிலின் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே தீசசதர்கள்  மற்றும் குழந்தை திருமண விவகாரத்தையும் தமிழக அரசு பிரச்சனையாக மாற்றியுள்ளது.  சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை சிறுமிகள் கொடுத்த ஆடியோ வீடியோ வாக்குமூலங்கள் ஆணையத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

 

மர்ம உறுப்பில் பரிசோதனை

 திங்கள்கிழமை ஆளுநரையும் அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் ஆணையத்தின் 132 அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூறினார். ஆணையத்தின் சார்பில் குழந்தைகளிடம் விசாரணை செய்தபோது அன்றைய தினம் மருத்துவர்கள் கைகளில் உரைகளை அணிந்து கொண்டு தங்களுடைய மர்ம உறுப்புகளில் சோதனை செய்தனர் என்று ஆணையத்தின் முன்பாக கூறியுள்ளனர். இதற்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் ஆணையத்தில் உள்ளது என தெரிவித்தார்.  உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனையை எவ்வாறு செய்தார்கள் என்பதற்கான விசாரணையை நடத்த வேண்டும் என தமிழக ஆளுநரிடம் ஆணையத்தின் சார்பில் கேட்டுக் கொள்வேன் என கூறினார். 

 

சட்டம் ஒழுங்கு பிரச்சனை

அமைச்சர் மா சுப்பிரமணியன் என்னை பற்றி தவறான கருத்துக்களை கூறி வருகிறார் ஆணைய உறுப்பினர் என்றால் யார் என்பது கூட தெரியாமல் மா. சுப்பிரமணியன் பேசி வருகிறார். ஆளுநரை குறை கூற வேண்டும் அவருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சர்கள் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதில் இரு விரல் பரிசோதனையும் ஒன்று என தெரிவித்தார். சிதம்பரத்தில் குழந்தைகளையும் மருத்துவர்களையும் தமிழக அரசு கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் ஆணையத்தில் உள்ளது என்றார். தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நடவடிக்கை எடுக்காமல் இருவிரல் பரிசோதனை விவகாரத்தை கையில் எடுத்து உண்மைக்கு புறமான தகவல்களை தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டினார். 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து .? ராமதாஸ் எச்சரிக்கை

click me!