உண்மையில் தைரியம் இருந்தால் சாலை வழியாக வாருங்கள்...! மோடிக்கு சாவல் விட்ட வைகோ!

 
Published : Apr 11, 2018, 02:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
உண்மையில் தைரியம் இருந்தால் சாலை வழியாக வாருங்கள்...! மோடிக்கு சாவல் விட்ட வைகோ!

சுருக்கம்

Vaiko Challenge to Modi

நாளை தமிழகம் வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, துணிவிருந்தால் சாலை வழியாக வரட்டும் என்று வைகோ சவால் விடுத்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறியுள்ளன.

தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மகாபலிபுரம் செல்கிறார். அங்கிருந்து திருவிடந்தைக்கு காரில் பயணமாகிறார். 

இது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ, உங்களுக்கு தைரியம் இருந்தால், சாலை வழியாக வாருங்கள் என்று கூறியுள்ளார். சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் காவிரிக்காகப் போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், நாளை சென்னை வரவிருக்கும் மோடி துணிவிருந்தால் சாலை வழியாக வரட்டும் என்றார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.ஐ.டி வளாகத்துக்குள் நேராக நுழைந்து, மோடிக்காக ஐ.ஐ.டி சுவரை
இடித்துக் கட்டப்பட்ட சாலை வழியாகச் சென்று கண்காட்சியில் பங்கேற்க இருக்கிறார். 

எதற்கு இவ்வளவு பாதுகாப்பு. கருப்புக்கொடிகளைப் பார்த்து பிரதமர் ஏன் பயப்பட வேண்டும். கொடிகளில் குண்டு வைத்து விடுவோம் எனப் பயப்படுகிறாரா...? இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியான பிரதமரை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால், நீங்கள் சாலை வழியாக வாருங்கள் என்று வைகோ ஆவேசமாக கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!
பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!