வெறுப்படிச்சா இமயமலைக்கு ஓடிடு... சும்மா இங்க வந்து சேட்டை பண்ணாத! நசுக்கி எடுத்த சீமான்

First Published Apr 11, 2018, 2:28 PM IST
Highlights
Seeman Angry Speech over Rajinikanth twitter Status


தமிழ்நாட்டுக்கான தனி கொடி ஏந்தி அண்ணாசாலையில் போராட்டம் வெடித்துள்ளதால், ஹோட்டல் அறையிலேயே கிரிக்கெட் வீரர்கள் இன்னும் விளையாட்டு மைதானத்துக்கு செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறினர்.

நொடிக்கு நொடி அண்ணாசாலை, வாலஜா சாலை, சேப்பாக்கம் பகுதிகளில்  ஆயிரக்கணக்கானோர் திரள்வதால் பதற்றம் நிலவியதால் போலீசாருக்கும் போரட்டக்கரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது அப்போது போலீசாரை இளைஞர் ஒருவர் தாக்கியதை ரஜினிகாந்த் கண்டித்து தந்து ட்விட்டர் பக்கத்தில் “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி IPL போட்டிக்கு எதிராக நடந்த கண்டன போராட்டத்தில் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் நடந்த சண்டையை சுட்டிக்காட்டி இப்படி ஒரு ட்விட் போட்டு ரஜினிகாந்த் தனது கண்டனத்தை அழுத்தமாக பதிவிட்டார்.

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும். pic.twitter.com/05buIcQ1VS

— Rajinikanth (@rajinikanth)

 

இந்த பதிவால் கொந்தளித்த இந்நிலையில், இன்று இயக்குனர் பாரதியாஜா அறிவித்தது போல, பாரதிராஜா தலைமையில் சீமான் மற்றும் சினிமா இயக்குநர்கள் ஏராளமானோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ரஜினியின் பேச்சை சீமான் கடுமையாக எச்சரித்தார்.  

அப்போது, ஜல்லிக்கட்டு ஜனநாயக போராட்டத்தில் காவல்துறை பொதுமக்களை ,பெண்கள் குழந்தைகள் என்று கூட கருணையில்லாமல் அடித்தார்கள், மீனவ சொத்துக்களை சூறையாடினார்கள் அப்போ என்ன பண்ணிட்டு இருந்திங்க?

அதே சீருடை போட்ட கருணையே இல்லாத காவலர் போன மாசம் தலைக்கவசம் அணியாமல் மனைவியுடன் பைக்கில் போகும்போது, நிற்கவில்லை என்பதால் எட்டி உதைச்சு கர்ப்பிணிய சாகடிச்சப்போ? கர்நாடக போலீஸ் விரட்டி அடிச்சி 40 பேருந்த எரிச்சபோ? ஆந்திர காட்டுகுள்ள 20 பேர சீருடை போட்டு சுட்டப்போ? இந்திய கடற்படையே தமிழ்நாட்டு மீனவன சுட்டப்போ? 8 வயது குழந்தையை 8பேர்(காவல்துறையினரும் சேர்ந்து) வன்புணர்ந்து கொல்லும் போதும்?, ஹெல்மெட் போடலனு 3 ட்ராபிக் போலீஸ் சேர்ந்து ஒரு இளைஞனைக் கம்பியில் கட்டி வைத்து அவனது அம்மா, சகோதரி முன்னாடியே அடித்து, கையை உடைச்சாங்களே, அப்போ கோமால இருந்தீரோ?  எங்களோட வழிய புரிஞ்சிக்காம இப்படியெல்லாம் நீ பேசக்கூடாது. வேருப்படிச்சா வெயிலுக்கு இமயமலைக்கு போயிடு சும்மா இங்க வந்து சேட்டை பண்ணிக்கிட்டு திரியக் கூடாது என கொந்தளித்தார்.

click me!