தேசத்துரோக வழக்கு : எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்..

 
Published : Jun 17, 2017, 10:52 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
தேசத்துரோக வழக்கு : எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்..

சுருக்கம்

vaiko appeared in egmore court

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

2009 ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் 'குற்றம் சாட்டுகிறேன்' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் 

வெளியே வந்தார். தேசத் துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், தானாக முன் வந்து ஏப்ரல் 3 ஆம் தேதி காலை எழும்பூர் நீதிமன்றத்தின் 13-வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் ஆஜரானார் வைகோ.

அப்போது, நீதிபதியிடம் பிணையில் செல்ல விருப்பமில்லை என வைகோ தெரிவித்ததை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு அவர், தனக்கு ஜாமீன் கோரி கடந்த மாதம் 22 ஆம் தேதி மனு செய்திருந்தார். அந்த மனுவை ஏற்று நீதிமன்றம் மே மாதம் 24 ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதன்படி, சென்னை புழல் சிறையில் இருந்து வைகோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக, மதிமுக பொது செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!