
மேட்டூரில் அணை கட்டினால், தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது. இதனை தடுத்து நிறுத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என மதிமுக பொதுசெயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.
தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைகோ, எழும்பூர் கோர்ட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், மத்திய அரசு அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. கார்நாடக அரசு மத்திய அரசை கண்டு கொள்ளாமல் அணை கட்டி வருகிறது.
அப்படி கட்டினால், எவ்வளவு மழை வெள்ளம் வந்தாலும், தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. இது கர்நாடகத்துக்கு சாதகமாக அமைந்துவிடும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராகவே உள்ளது.
மதுக்கடையை திறக்க கூடாது என பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அங்கு வந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன், ஒரு பெண்ணை கன்னத்தில் அடித்தார். இதனால், அந்த பெண்ணுக்கு செவி திறன் இல்லாமல் போய்விட்டது.
அந்த ஏடிஎஸ்பி மீது அரசு இதுவரை என்ன நடவடிக்கை