
தேச துரோக வழக்கின் விசாரணை, கடந்த 3ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராக மதிமுக பொது செயலாளர் வைகோவை, 15 சிறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து சிறைக்காவல் முடிந்து வைகோ, இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, வைகோவின் சிறை காவலலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அவர், மீண்டும் புழல் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் ஒரு மாதத்துக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை பற்றி பிரதமர் நரேந்திர மோடி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மோடியின் அலட்சியத்தை காட்டுகிறது.
போராட்டத்தில் ஈடுபடுவது 200 பேர் மட்டும்தானே என அவர் நினைக்கிறார். ஒட்டு மொத்த தமிழக விவசாயிகள் சார்பில் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதை மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது.
பிரதமர் மோடி, ஒரு கார்ப்பரேட் ஏஜென்ட்டாக இருக்கிறார் என்பதை, அவரை நேரடியாகவே கூறியிருக்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மோடி, கோடிக்கணக்கான விவசாயிகளை பழி வாங்க கூடாது.
மத்திய அரசு, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்களது கோரிக்கைகளான வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, காவரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஆகியவை நிறைவேற்ற வேண்டும்.