7 தொகுதி கேட்டு அடம்பிடிக்கும் வைகோ... மினிமம் மூணு கேட்டு ஒட்டாரமாய் நிற்கும் திருமா!! காண்டான திமுக!!

By sathish kFirst Published Feb 23, 2019, 1:08 PM IST
Highlights

திமுக, கூட்டணியில், மதிமுக, 7 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, 3 தொகுதிகளும் கேட்டு, பட்டியல் கொடுத்துள்ளன.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, மதிமுக - விசிக, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவற்றுடன், நேற்று, திமுக, தரப்பில், முதல் கட்ட பேச்சு நடத்தப்பட்டது.

இதையடுத்து, திமுக, கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

அறிவாலயத்தில், நேற்று முன்தினம் நடந்த டிஸ்கஷனில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில்,  எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக, நேற்று மதிமுக, பொருளாளர் கணேச மூர்த்தி, துணை பொதுச் செயலாளர் சத்யா உள்ளிட்டோருடன், திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான, திமுக குழுவினர் அறிவாலயத்தில் பேச்சு நடத்தினர். 

மதிமுக, தரப்பில், 2014 நாடாளுமன்றத் தேர்தலில், 25.87 சதவீத ஓட்டுகளை பெற்ற, விருதுநகர், 25.30 சதவீத ஓட்டு களை பெற்ற, ஈரோடு; 18.32 சதவீத ஓட்டுகள் பெற்ற, காஞ்சிபுரம், 18.67 சதவீத ஓட்டுகள் பெற்ற, தென்காசி மற்றும் தேனி, தஞ்சாவூர், தென்சென்னை என, ஏழு தொகுதிகளை ஒதுக்கும்படி, பட்டியல் கொடுக்கப்பட்டது.

அதற்கு, திமுக, தரப்பில், ஸ்டாலினிடம் பேசி, எத்தனை தொகுதி என்பதை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். பின், கணேசமூர்த்தி அளித்த பேட்டியில், ''தொகுதி பங்கீடு பேச்சு, சுமுகமாக முடிந்தது. நல்ல முடிவை, நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

அதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிகுமார் உள்ளிட்டோருடன், திமுக, தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, சிதம்பரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய, 3 தொகுதிகளை கேட்டு, விசிக, தரப்பில் பட்டியல் கொடுக்கப்பட்டு உள்ளது. மதிமுகவுக்கு அளித்த அதே பதிலையே, திமுக, தரப்பில், திருமாவளவனுக்கும் தெரிவித்து உள்ளார்.

click me!