‘திராவிடத்தை ஒழிப்போம்னு இப்ப சொல்லுங்க..’பாமகவை அதிரவைத்த தம்பிதுரை!

By Asianet TamilFirst Published Feb 23, 2019, 12:41 PM IST
Highlights

பாஜகவுடன் கூட்டணி அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிமுக மூத்தத் தலைவரும் எம்.பி.யுமான தம்பிதுரை, தற்போது பாமக பக்கம் வந்துள்ளார். திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று கூறிய பாமகவால், அதே கருத்தை இப்போது கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிமுக மூத்தத் தலைவரும் எம்.பி.யுமான தம்பிதுரை, தற்போது பாமக பக்கம் வந்துள்ளார். திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று கூறிய பாமகவால், அதே கருத்தை இப்போது கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வான் உள்ள வரை; கடல் உள்ள வரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பேசிவந்த பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 7 தொகுதிகளைப் பெற்றுக்கொண்டார். இந்தக் கூட்டணியை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், பாமக தர்மசங்கடத்துக்கு உள்ளாகும்வகையில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தம்பிதுரையும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது கேள்வி எழுப்பினார்.

“தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிடக் கட்சியாக அதிமுக ஆளும். அதை யாரும் ஒழித்துவிட முடியாது. திராவிட கட்சிகளை வளர விட மாட்டோம் என்று பாமக கூறியது தவறான பேச்சு. அதை கண்டிக்கிறோம். திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று கூறிய பாமகவால், அதே கருத்தை இப்போது கூற முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறும்போது, “தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதே அதிமுகவின் எண்ணம். திமுக - காங்கிரஸ் வெற்றியைத் தடுப்பதே அதிமுகவின் வியூகம். பாஜகவுடன் கொள்கை ரீதியாக சமரசம் செய்யவில்லை கூட்டணி வேறு, கொள்கை வேறு. எங்களை பொறுத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதே குறிக்கோள்.” என்றும் தெரிவித்தார்.
 

click me!