"41வது வருடம் வைகோ..!!! 9 தேவர் அமைச்சர்கள்...!!!" : வரிந்துகட்டும் அதிமுக...!!

Asianet News Tamil  
Published : Oct 31, 2016, 02:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
"41வது வருடம் வைகோ..!!! 9 தேவர் அமைச்சர்கள்...!!!" : வரிந்துகட்டும் அதிமுக...!!

சுருக்கம்

41-வது வருடமாக தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி சாதனை படைத்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

40 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி செயின்ட் சேவியர்  கல்லூரியில் படிக்கும் போதே அரசியலில் நுழைந்த வைகோ அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து சென்று வருகிறார்.

இதேபோன்று சி.பா. ஆதித்தனார், மற்றும் பெரியார் அண்ணா ஆகியோரது  நினைவு நாள் மற்றும் பிறந்தநாளுக்கும் அஞ்சலி செலுத்த வைகோ தவறுவதில்லை.

பல முறை சிறைக்கு சென்று மாதக்கணக்கில் சிறை வாசம் அனுபவித்தாலும் அப்போதும் கூட தான் பிடித்த கொள்கையிலிருந்து விலகாமல் தொடர்ந்து வைகோ அஞ்சலி செலுத்தி வருவது ஆச்சர்யத்திற்குரியது தான்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த சில வருடங்களாக பசும்பொன்னிற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்.

ஆனால் அதிமுக வட்டாரத்திலோ இது ஒரு அதிமுகவின் கட்சி விழா போன்றே கொண்டாடுவது சமீபத்திய வாடிக்கையாகிவிட்டது.

கடந்த 10 வருடங்களாகவே அதிமுகவின் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ஏராளமானோர் சென்று பசும்பொன்னிலும், சென்னையிலும் அஞ்சலி செலுத்துவது வழக்கமாகி உள்ளது.

கடந்த முறை எப்போதும் இல்லாத அளவாக இந்த முறை 9 தேவர் சமுதாய அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இது அதிமுகவில் தேவர் சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையே காட்டுகிறது.

அமைச்சரவையை வழி நடத்தும் ஓ.பன்னீர்செல்வம், இடையில் மீண்டும் பார்முக்கு வந்துவிட்ட வனத்துறை சீனிவாசன், மதுரையை மையம் கொண்டுள்ள கூட்டுறவு செல்லூர்.ராஜு, திருவாரூர் உணவு காமராஜ், நாகை கைத்தறி ஓ.எஸ்.மணியன், வருவாய்த்துறை ஆர்.பி.உதயகுமார், புதுக்கோட்டை மக்கள் நல்வாழ்வு விஜயபாஸ்கர், உள்ளுர் அமைச்சரான தகவல் தொழில்நுட்ப மணிகண்டன், சிவகங்கை கதர் வாரியம் பாஸ்கரன் என அதிமுவில் 9 தேவர் அமைச்சர்கள் உள்ளனர்.

கடந்த ஆட்சி காலத்தில் கவுண்டர் சமுதாய அமைச்சர்கள் எண்ணிக்கை பலத்தில் அதிகமாக இருந்தனர். தற்போது 9 என்ற விகிதத்தில் அதிமுகவில் தேவர் சமுதாயத்தின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

நாட்டின் சுதந்திரத்திற்கு போராடியும் தனது பரம்பரை சொத்திலிருந்து பெரும் பகுதியை தலித்களுக்கு தானமாக கொடுத்த தியாகி முத்துராமலிங்னார். அவரது இந்த தியாகம், சேவை மற்றும் பெருந்தன்மையை ஜாதி வட்டத்துக்குள் அடைத்துவிடாமல், அனைத்து சமுதாயத்தினருக்குமான தலைவராக நாம் பார்க்க வேண்டும்.

 

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!