இன்று தேவர் குரு பூஜை விழா – ஸ்டாலின் , ஓபிஎஸ் மரியாதை..!!!

Asianet News Tamil  
Published : Oct 31, 2016, 12:17 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
இன்று தேவர் குரு பூஜை விழா – ஸ்டாலின் , ஓபிஎஸ் மரியாதை..!!!

சுருக்கம்

தமிழகம் முழுவதும் இன்று முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழா நடக்கிறது. இதை தொடர்ந்து அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் என ஏராளமானோர், தேவரின் சிலை மற்றும் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் கண்காணிப்பு பணிக்காக முதன்முறையாக ஆளில்லா விமானங்களை, தமிழக காவல்துறை பயன்படுத்தியுள்ளது.

இந்நிலையி இன்று காலை ராமபுரத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு நிலோபர் கஃபில், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, எம்.சி.சம்பத், ம.பா.பாண்டியராஜன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்பட அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகள், ச.ம.க. தலைவர் சரத்குமார் உள்பட ஏராளமானோர் கலநது கொண்டு மரியாதை செலுத்தினர்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!