முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை – மற்றொரு பிசியோதெரபி நிபுணர் சென்னை வருகை

Asianet News Tamil  
Published : Oct 30, 2016, 10:59 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை – மற்றொரு பிசியோதெரபி நிபுணர் சென்னை வருகை

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க மற்றொரு பிசியோதெரபி நிபுணர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வருகிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லண்டன் டாக்டர் ரிச்சல் ஜான்பீலோ, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் ஆகியோர் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலையை, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, 3–வது முறையாக சென்னை வந்து சிகிச்சை அளித்து, கடந்த 3 நாட்களுக்கு முன் நாடு திரும்பினார். அவர் மீண்டும் சென்னை வந்து சிகிச்சை அளிப்பார். அதேபோல், எய்ம்ஸ் டாக்டர் கில்நானியும் டெல்லி திரும்பினார்.

தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பிசியோதெரவி சிகிச்சை தொடர்ந்து வருகிறது. சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங், சொந்த நாடு திரும்புவதாகவும், அவருக்கு பதிலாக மற்றொரு பிசியோதெரபி நிபுணர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வருகிறார் என கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Vijay: ஜெயலலிதா வீட்டில் குடியேறும் விஜய்.?! மீண்டும் பரபரப்பாகும் போயஸ்கார்டன்.!
TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?