
ஆர்.கே. நகர் இடைதேர்தல் தேதி அறிவித்தவுடன் சிலிர்த்து எழுந்து விட்டார்கள் அதிமுக சசிகலா அணியினர்.
தேதி அறிவிக்கப்பட்ட 10 நிமிடத்துக்குள்ளாகவே பத்திரிகையாளர்களை சந்தித்து தனது கருத்தை தெரிவித்து விட்டார் அதிமுகவின் முன்னால் அமைச்சர் வைகை செல்வன்.
“ஆர்.கே.நகரில் போட்டியிடுவதரற்கு அதிமுக தயாராக உள்ளது. எங்களது பலத்தை மீண்டும் ஆர்.கே நகரில் நிருபிப்போம். எதிர்த்து போட்டியிடும் மற்ற அனைத்து கட்சியினரின் டெபாசிட் நிச்சயம் காலியாகும்” என வைகை செல்வன் தெரிவித்தார்.
‘பின்னர் ஆர். கே நகரில் யாரை நிறுத்த போகிறீர்கள்?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளிக்க மறுத்த அவர் எதிரிகளின் டெபாசிட் காலியாகும் என்று மட்டும் கூறிவிட்டு சென்று விட்டார்.
வைகைசெல்வன் சொல்வது போல் மற்ற கட்சிகளின் டெபாசிட் காலியாகுமா? என்பதை இனி பார்க்கலாம்... :-
வட சென்னையில் உள்ள இந்த ஆர்.கே. நகர் தொகுதியில் 80% வரை தொழிலாளர் வர்க்கத்தை கொண்டதாகும்.
எம்ஜிஆர் ஆட்சி காலத்திலிருந்தே தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது ஆர்.கே. நகர்.
எஸ்.ஆர்.வெற்றிவேலை ராஜினாமா செய்ய சொல்லி விட்டு இடைதேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா, திமுக போட்டியிடாததால் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த பொதுத்தேர்தலின் போதும் ஜெயலலிதா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக தலைவர்களில் ஒருவரான சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழனை அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.
ஒன்றுபட்ட அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் பலத்தால் அதிமுக தொடர்ந்து அமோக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் வைகை செல்வன் கூறுவது சரியாக வருமா என்று கேட்டால் அதற்கான பதில் சந்தேகம் தான் என்று சொல்லவேண்டும்.
ஜெயலலிதா போட்டியிடும்போது ஒன்று பட்ட அதிமுகவில் அந்த தொகுதியில் செல்வாக்குள்ள நபர்களாக இருந்த மதுசூதனன், ஜெயக்குமார் ஆகியோர் இப்போது வேறுபட்டு நிற்கின்றனர்.
அது தவிர ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என ஆர்கே நகர் தொகுதி வாசிகள் பெரிதும் நம்புகின்றனர்.
இது நிச்சயம் சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு பெரிய பின்னடைவை தரும் என சொல்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
அதிமுக சசிகலா ,ஓபிஎஸ், தீபா என மூன்றாக பிரிந்துள்ளதால் சந்தில் சிந்து பாடும் வேலையயை திமுக கணகட்சிதமாக செய்யும் என்கின்றனர் இதே அரசியல் பார்வையாளர்கள்.
தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் இனி புதிய கூட்டணிகளை அமைத்து கொண்டு கட்சிகள் போட்டியிடுமா? என்பது சந்தேகம் தான்.
திமுகவும் அதிமுகவும் கூட்டணி பலமின்றி அல்லது ஏற்கனவே தங்களுடன் கூட்டணியில் உள்ளவர்களோடு இணைந்து மட்டும்தான் போட்டியிடுவார்கள்.
தனிப்பட்ட செல்வாக்கு என பார்த்தால் தீபாவுக்கும் முன்னாள் அமைச்சர் மதுசூதனனுக்கும்தான் அத்தொகுதியில் உள்ளது.
பொறுத்திருந்து பார்க்கலாம்.. வைகை செல்வன் சொல்வது போல அதிமுக அதிக ஓட்டு வாங்குவார்களா? எதிர்கட்சிகளின் டெபாசிட் காலியாகிறதா? என்று...