அரசியல் சுழலில் சிக்கி தவிக்கும் ஐஏஎஸ்... “அப்போல்லோ சொன்னதைத்தான் ஓபிஎஸ்சிடம் சொன்னேன்” – ராதாகிருஷ்ணன்

Asianet News Tamil  
Published : Mar 09, 2017, 12:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
அரசியல் சுழலில் சிக்கி தவிக்கும் ஐஏஎஸ்... “அப்போல்லோ சொன்னதைத்தான் ஓபிஎஸ்சிடம் சொன்னேன்” – ராதாகிருஷ்ணன்

சுருக்கம்

radhakrishnan statement for ops complaint

தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் நடத்திய போராட்டம் அந்த அணியினரிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்தவுடன் உரையாற்றிய ஓபிஎஸ் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கரையும் அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணனையும் பிடிபிடி என பிடித்தார்.

ஓபிஎஸ்சுக்கு சிகிச்சை முறைகள் பற்றி அனைத்தும் தெரியும் என எய்ம்ஸ் அறிக்கையை வெளியிடும்போது ராதாகிருஷ்ணன் தெரவித்திருந்தார்.

இதற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். சிகிச்சை விபரங்களை கூறியதாக தன்னிடம் ராதாகிருஷ்ணன் கூறியது பொய் என்றும் அவரது பேச்சை வாபஸ் வாங்க வேண்டும் என ஓபிஎஸ் கூறினார்.

ராதாகிருஷ்ணன் தந்து பேச்சை வாபஸ் பெறாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என ஓபிஎஸ் ஆவேசமாக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக பதிலளித்துள்ள தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு எதுவும் முழுமையாக தெரியாது என ஜகா வாங்கியுள்ளார்.

மேலும் அப்போல்லோ கொடுத்த அறிக்கை மற்றும் தகவல்களையே தான் வெளியில் சொன்னதாகவும் தமக்கு நேரடியாக எந்த விசயமும் தெரியாது என்பதையும் ராதாகிருஷ்ணன் ஒத்துகொண்டார்.

அதிமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் ஜெ உடல்நிலை தொடர்பாக என்னென்ன விசயங்கள் தெரியுமோ அந்த விசயங்கள்தான் ஓபிஎஸ்சுக்கு தெரியும் என தாம் சொன்னதாக மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

எது எப்படியோ அரசியல் வாதிகளின் அதிகார சண்டை வரம்புக்குள் ஐஏஎஸ் அதிகாரிகளையும் உள்ளே கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.

இனி ராதாகிருஷ்ணனே நினைத்தாலும் இந்த அரசியல் சுழலில் இருந்து அவ்வளவு எளிதாக வெளியேறுவது என்பது முடியாத காரியம்தான்.

PREV
click me!

Recommended Stories

TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?
ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!