வாகை சந்திரசேகர் இது நியாயமா ..? சி.எம் கை மீது மாஸ்கை வைக்கலாமா..?

By Ezhilarasan BabuFirst Published Aug 17, 2021, 10:28 AM IST
Highlights

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல நடிகரும், முன்னாள் வேளச்சேரி எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகர், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார்.

டி வி பெட்டியை திறந்தாலே சேனலில் நமது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிமிடத்துக்கு ஒரு முறை தோன்றி, மாஸ்க் அணிவது குறித்த அவசியத்தையும் மாஸ்க்கை ஒழுங்கான முறையில் எப்படி அணிவது என்பது பற்றிய விளக்க உரையும் கூறிக் கொண்டே இருக்கிறார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மாஸ்க்கை கையாளும் விதத்தை தான். இவ்வளவு படித்துப் படித்து அறிவுரை கூறிய முதலமைச்சரிடம், விஐபி ஒருவரே மாஸ்க்கை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது: 

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல நடிகரும், முன்னாள் வேளச்சேரி எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகர், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார். பொதுவாக இப்படி பதவி ஏற்பவர்களை முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் தான் சந்திப்பார், ஆனால் வாகை சந்திரசேகர் மீதுள்ள நன்மதிப்பு, அன்பாலும் தன்னுடைய வீட்டுக்கே வர சொல்லிவிட்டாராம் முதலமைச்சர் ஸ்டாலின். முதலமைச்சரிடம் ஆசி பெறும் பதற்றத்தில் வாகை சந்திரசேகரும் அவருக்கு பூங்கொத்து கொடுக்கும்போது முகத்தில் இருந்த மாஸ்கை கழட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அப்போது கழற்றிய மாஸ்க்கை தனது பேண்ட் பாக்கெட்டில் அல்லது சட்டை பாக்கெட்டில் வைக்காமல் கையிலே வைத்து கொடுத்துள்ளார் வாகை. அது அந்த புகைப்படத்திலும் தெள்ளத்தெளிவாக பதிவாகியுள்ளது.

மேலும், வாகை சந்திரசேகர் அணிந்திருந்த மாஸ்க் முதலமைச்சர் ஸ்டாலின் கையில் படும் அளவிற்கு மிக நெருக்கமாக காணப்படுகிறது. ஒருவர் அணிந்த மாஸ்க்கை மற்றொருவர் தொடக்கூடாது, மாஸ்க் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் தான் முதலமைச்சர் பதவி ஏற்ற நாளில் இருந்து கதறாத குறையாக எடுத்துக் கூறி வருகிறார். அதை கவனத்தில் கொள்ளாமல், ஒரு தவறான முன்னுதாரணமாக வாகை சந்திரசேகர் மாஸ்க் விஷயத்தில் அலட்சியமாக இருந்தது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. வேண்டுமென்றே செய்யவில்லை என்றாலும் கூட, இந்த விஷயத்தில் நிச்சயம் கவனம் தேவை தானே.? கொரோனோ நோய்த்தொற்று காலத்தில் நமக்காக அயராது உழைக்கும் முதலமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகளை காப்பது  நமது கடமை அல்லவா. இயல் இசை நாடக மன்ற தலைவராக பதவியேற்க உள்ள திருவாளர் வாகை சந்திரசேகருக்கு வாழ்த்துக்கள். 
 

click me!