அதிமுக பிரமுகர் வீட்டில் சோதனை.. பணம், ஆவணங்கள் பறிமுதல்..? அதிர்ச்சியில் முன்னாள் அமைச்சர்.

Published : Aug 17, 2021, 09:35 AM IST
அதிமுக பிரமுகர் வீட்டில் சோதனை.. பணம், ஆவணங்கள் பறிமுதல்..? அதிர்ச்சியில் முன்னாள் அமைச்சர்.

சுருக்கம்

மாநகராட்சி டெண்டரில் எத்தனை ஒப்பந்தங்கள் வெற்றிவேல் எடுத்துள்ளார் அதில் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. 

அதிமுக பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் 11.80 லட்ச பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை மாநகராட்சி மற்றும் கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது பதிமூன்றரை இலட்சம் கணக்கில் வராத பணமும் 2 கோடி ரூபாய் வைப்புத் தொகை தொடர்பான ஆவணங்களும் மாநகராட்சி ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கின. 

மேலும் எஸ் பி வேலுமணி தொடர்பான வங்கி கணக்குகள் வங்கி லாக்கர்கள் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் எஸ்.பி வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், குறிப்பாக 2014 முதல் 18 ஆண்டு வரை நடந்த சென்னை மாநகராட்சி மற்றும் கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் தொடர்பான டெண்டர்களில் விதிகளை மீறி ஒப்பந்தம் செய்த அரசு ஒப்பந்ததாரர்கள் இன் பட்டியலை லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்துள்ளது. சோதனையின்போது கிடைக்கப்பெற்ற மாநகராட்சி ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மூலம் இந்தப் பட்டியலைத் தயாரித்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணைச் செயலாளரும் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளரும், மாநகராட்சி ஒப்பந்ததாரருமான வெற்றிவேல் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முதல் இன்று காலை வரை சோதனை நடத்தினர். 

மாநகராட்சி டெண்டரில் எத்தனை ஒப்பந்தங்கள் வெற்றிவேல் எடுத்துள்ளார் அதில் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. முக்கியமாக 346 கோடி ரூபாய் டெண்டரில் வெற்றிவேலின் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை வைத்து  லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் காலை வரை நடத்திய சோதனையில் வெற்றிவேல் வீட்டில் கணக்கில் காட்டப்படாத 11.80 லட்ச ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதே போல் டெண்டர் தொடர்பான முக்கிய ஆவணங்கள், லேப்டாப் போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து  வெற்றிவேல் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்தில் தமிழகத்தில் கால்பதிக்கும் பிரதமர் மோடி-ராகுல் காந்தி.. களைகட்டும் அரசியல் களம்!
திமுகவிடம் சில தலைவர்கள் வாங்கி தின்கிறார்கள்..! ஸ்டாலினை தொடர்ந்து மிரட்டும் காங்கிரஸ்..!