எந்த மிரட்டலுக்கும் திமுக அரசு அஞ்சாது.. சுப்பிரமணிய சுவாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

Published : Aug 17, 2021, 10:27 AM IST
எந்த மிரட்டலுக்கும் திமுக அரசு அஞ்சாது.. சுப்பிரமணிய சுவாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

சுருக்கம்

பல ஆண்டுகள் பணிபுரிந்து, வயது மூப்பிற்கு பிறகும், பலர் பணிபுரிந்து வருகின்றனர். 58 பேர் நியமனம் காரணமாக யாரும் பணி இழந்திருந்தால் எங்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுத்து மாற்றுப்பணி தரப்படும். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்ட விவகாரத்தில் யாரும் உயர்நிலைக்கு வரக்கூடாது என சிலர் விஷமத்தனமாக செயல்படுகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு;-  இந்துசமய அறநிலையத்துறை கோயில்களில் இருந்து பழைய அர்ச்சகர்கள் யாரையும்  வெளியேற்றும் எண்ணம் இல்லை. கோயில்கள் ஏற்கனவே உள்ள பட்டாச்சாரியார்களையோ அர்ச்சகர்களையோ யாரையும் பணியில் இருந்து நீக்கும்  திட்டமிட்டமில்லை. 58 அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக சிலர் விஷம பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்ட விவகாரத்தில் யாரும் உயர்நிலைக்கு வரக்கூடாது என சிலர் விஷமத்தனமாக செயல்படுகின்றனர். தகுதியுள்ள, பயிற்சி பெற்றவர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகள் பணிபுரிந்து, வயது மூப்பிற்கு பிறகும், பலர் பணிபுரிந்து வருகின்றனர். 58 பேர் நியமனம் காரணமாக யாரும் பணி இழந்திருந்தால் எங்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுத்து மாற்றுப்பணி தரப்படும். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது தவறு என்றால் அந்த தவறை தமிழக முதலமைச்சரும் செய்வார்.

மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கையில்;-  கடந்த 10 ஆண்டுகளாக அர்ச்சகர்களாக யாரும் நியமிக்கப்படவில்லை. புதிய பணி நியமனம் செய்யப்படவில்லை. 1954 சட்டப்படி பரம்பரை அர்ச்சகரை மாற்றலாம் என உள்ளது. சில ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்கிறது.  மிரட்டலுக்கு பணியும் அரசல்ல திமுக அரசு. அரசியல் சட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை எங்கும் மீறவில்லை. விதிமீறலை சுட்டிக்காட்டினால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்  என்றார். 

PREV
click me!

Recommended Stories

லட்சத்தீவில் பாகிஸ்தானை ஓடவிட்ட ஆற்காட்டின் இரட்டை நட்சத்திரங்கள்..! வரலாற்று சாதனை ஏ.ஆர்- ஏ.எல் முதலியார்கள்..!
திமுக ஆமை..! நாங்கள் குதிரை..! அதிமுக பற்றி ரகுபதிக்கு என்ன கவலை...? ஜெயக்குமார் பதிலடி..!