டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்.. குடிமகன்கள் அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published Sep 2, 2021, 4:57 PM IST
Highlights

தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்க செல்வோர் ஆதார் அட்டை, கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சான்றுகளை மதுக்கடை ஊழியர்களிடம் காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படும் என  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில்  மதுபானம் விற்பனை செய்யப்படும்.  தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனை இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா 2வது பெருமளவு குறைந்து வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவை மக்களிடையே தடுப்பூசி மீது நம்பிக்கை வந்ததையே வெளிப்படுத்துகிறது. மேலும், கொரோனா தடுப்பூசியை அதிகரிக்க ஆட்சியர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்க செல்வோர் ஆதார் அட்டை, கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சான்றுகளை மதுக்கடை ஊழியர்களிடம் காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படும் என  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தமிழகத்திலேயே இந்த நடைமுறை முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட மக்களின் 97 சதவீதம் பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாத எஞ்சிய 3 சதவீதம் பேரை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார். 

click me!