இளைஞர்கள் படை எங்கள் பக்கம்... திமுகவுக்கு 3 மாதம் கெடு விதித்த பாஜக அண்ணாமலை..!

Published : Sep 02, 2021, 04:38 PM IST
இளைஞர்கள் படை எங்கள் பக்கம்... திமுகவுக்கு 3 மாதம் கெடு விதித்த பாஜக அண்ணாமலை..!

சுருக்கம்

இன்னும் 3 மாதத்தில் வேளாண் சட்டம், நீட் தேர்வு விஷயத்திலும் திமுகவினர் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்னும் 3 மாதத்தில் வேளாண் சட்டம், நீட் தேர்வு விஷயத்திலும் திமுகவினர் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அப்போது, ’’பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வாக உள்நாட்டில் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாஜக கட்சி அடிப்படையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர்கள் படை நம் பக்கம் திரும்பி இருக்கிறது. இதற்கு காரணம் நம் கட்சிக்காக முன்னோர்கள், மூத்த நிர்வாகிகள் பிரதிபலன் பாராமல் உழைத்ததுதான்.

 திமுக 120 நாள் ஆட்சியில் சொன்னது எதையும் செய்ய முடியாத நிலையே நீடிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவிற்கு தெரியும். நீட் தேர்வு ஏழை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தமிழ் வழியில் படித்த பலர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். புதிய கல்விக்கொள்கை வேண்டும் என்று 51 இலட்சம் பேர் கையொப்பமிட்டுள்ளனா். திமுக நடத்தும் இரண்டு, மூன்று ஊடகங்களின் ஆதரவு பாஜக-வுக்கு இல்லை.

பெட்ரோல் விலை, கேஸ் விலை உயரும் போது மக்கள்  பாதிக்கப்படுவார்கள். இந்த விலையை மிக விரைவாக முறைப்படி கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மிக வேகமாக இந்த விலை கட்டுக்குள் வரும். பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த முறைப்படி என்ன செய்யமுடியும் என்பதை பாராளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி, நிரந்தர தீர்வாக உள்நாட்டில் அசாம், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு  உற்பத்தியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும்’’என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?