பிரதமர் மோடி அவர்களே இந்த செயல் தேச நலனுக்கு எதிரானது.. சட்டமன்றத்தில் தெறிக்கவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2021, 4:00 PM IST
Highlights

எனவே நானும் அதுகுறித்து ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவருடைய பொதுச் சொத்தாகும், நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும், சிறு குறு  தொழில்களில் ஆணிவேராக விளங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்கள் அவை என்பது எல்லோருக்கும் தெரியும்.

பொதுச் சொத்துக்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை தொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தின்போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் முழுவிபரம் பின்வருமாறு:- மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொதுத்துறை நிறுவனங்கள் பிரச்சினை குறித்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி அதற்கு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள். 

எனவே நானும் அதுகுறித்து ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவருடைய பொதுச் சொத்தாகும், நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும், சிறு குறு  தொழில்களில் ஆணிவேராக விளங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்கள் அவை என்பது எல்லோருக்கும் தெரியும். லாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் மக்கள் நலன் கருதி இயங்கி வரக்கூடிய பொதுத் துறை நிறுவனங்களை விற்பதோ குத்தகைக்கு விடுவது தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பது நம்முடைய கருத்து.

எனவே, ஒன்றிய அரசினுடைய பொதுச் சொத்துக்களை தனியார்மயமாக்கும் போக்கினை எதிர்க்கக் கூடிய வகையிலே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் இதை சுட்டிக்காட்டி நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்கக் கூடிய வகையில், கடிதம் எழுத இருக்கிறேன் என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என முதலமைச்சர் உரையாற்றியுள்ளார். 
 

click me!