ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் வழங்காத ஆஸ்ரம் பள்ளி... லதா ரஜினிகாந்தை கண்டித்து ஆர்பாட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 2, 2021, 3:28 PM IST
Highlights

ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் லதா ரஜினிகாந்த். இங்கு 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இதனைக் கண்டித்து ஊழியர்கள் இன்று பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள், ’கொரொனோ காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியத்தை வழங்காமல் பள்ளி நிர்வாகம் தங்களை வஞ்சிக்கிறது. ஊதியம் குறித்து கேட்டால் தொடர்ந்து இழுதடிக்கிறார்கள். நாங்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.

ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையினையும் இதுவரை நிர்வாகம் செலுத்தாமல் இருக்கிறது’’ என குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு முன்பும் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. 

click me!