இரட்டை இலை வழக்கில் கைதான சுகேஷிக்கு உதவி... டெல்லி திகார் சிறையில் 23 டிஎஸ்பிக்கள் மாற்றம்.!

By vinoth kumarFirst Published Sep 2, 2021, 3:21 PM IST
Highlights

தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோடீஸ்வர இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  அவ்வப்போது சிறையில் அடைக்கப்படும் ஜாமீனில் வெளியே வருவதும் வாடிக்கையாக இருந்து வந்தார். 

இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கு உதவிய குற்றச்சாட்டில் டெல்லி திகார் சிறையின் 23 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோடீஸ்வர இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  அவ்வப்போது சிறையில் அடைக்கப்படும் ஜாமீனில் வெளியே வருவதும் வாடிக்கையாக இருந்து வந்தார். 

இந்நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் தன்னுடன் சிறையில் உள்ள தொழில் அதிபர் ஒருவரை ஜாமீனில் விடுதலை செய்ய உதவி செய்வதாக கூறி அவரது மனைவியை தொடர்பு கொண்டுள்ளார். இது குறித்து சுமார் பல கோடி ரூபாய் வரை சுகேஷ் பேரம் பேசிய நிலையில், அது மோசடியாக இருக்கலாம் என கருதி தொழில் அதிபரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொழில அதிபர் மனைவிக்கு வந்த செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்த போது அது டெல்லி திகார் சிறையில் இருந்துள்ளது. இதனை அடுத்து சிறைக்கு சென்ற போலீசார் சுகேசின் ஆப்பிள் ஐபோனை பறிமுதல் செய்தனர். மேலும், சிறையில் இருந்து கொண்டு செல்போனில் பேசுவதற்கான வாய்ப்பை அங்குள்ள சிறை அதிகாரிகள் செய்து கொடுத்தனர். 

 திகார் சிறையில் நிர்வாகம் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கொண்டு பணம் பறித்தல் வேலையில் ஈடுபட்டது உறுதி செய்தது. இவ்விவகாரம் தொடர்பாக சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி நீண்ட காலமாக திகார் சிறையில் பணியாற்றி 23 துணை கண்காணிப்பாளர்களையும் (டிஎஸ்பி) அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள், சிறையில் இருந்து கொண்டு செல்போனை பயன்படுத்த உதவி அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

click me!