மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பாமக எம்.எல்.ஏ.,க்கள்... மகிழ்ந்து போன ராமதாஸ்..!

Published : Sep 02, 2021, 02:17 PM IST
மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பாமக எம்.எல்.ஏ.,க்கள்... மகிழ்ந்து போன ராமதாஸ்..!

சுருக்கம்

விழுப்புரத்தில் இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் அறிவிப்பையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பாமக எம்.எல்.ஏக்கள் நன்றி தெரிவித்தனர்.  

விழுப்புரத்தில் இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் அறிவிப்பையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பாமக எம்.எல்.ஏக்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 மாவீரர்களுக்கு ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும்; அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இதற்கு பாமக ராமதாஸ் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் அறிவிப்பையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பாமக எம்.எல்.ஏக்கள் நன்றி தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!