இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்... அமைச்சர் மா.சு மாஸ் அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Sep 2, 2021, 3:43 PM IST
Highlights

 25 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு. கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் இயக்கப்படும்" என்றார்.
 

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தமிழக சட்டப் பேரவையில் பேசிய அவர், "கடந்த ஆட்சியை காட்டிலும் இந்த ஆட்சியில் N 95 மாஸ்க், PPE கிட் ஆகியவற்றை வாங்கியதில் ரூ.48 கோடியே 15 லட்சம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இந்த பணம் யாருக்கு எங்கு சென்றதோ தெரியவில்லை. இந்தியாவிலேயே முதல் முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகாமையில் ஏற்படுத்தப்படும்.

 
 
தாய்மார்களுக்கு பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தத்தை தடுக்கும் விதமாக மனநல நிபுணர்கள் சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்படும். மக்களை தேடி மருத்துவ திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். 25 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு. கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் இயக்கப்படும்" என்றார்.
 

click me!