மின்னல் வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி.. நேற்று ஒரே நாளில் 27004 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Published : Jun 17, 2021, 12:45 PM IST
மின்னல் வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி.. நேற்று ஒரே நாளில் 27004 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சுருக்கம்

நேற்று ஒரே நாளில் மட்டும் 27,004 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தமிழகத்தில் 1,10,34,270 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கும் நிலையில் அதில் சென்னையில் மட்டும் தற்போது வரையும் 22,52,361  தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. 

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 27,004 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மொத்தமாக இதுவரையும் 22,52,361 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை படிபடியாக உயர்ந்து வரும் நிலையில், தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் கூடுதலாக தடுப்பூசி வழங்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில் மத்திய அரசு ஜூன் மாத நிலவரப்படி 42. 58 லட்சம் தடுப்பூசிகள் பல்வேறு கட்டமாக வழங்குவதாக தெரிவித்து, தற்போது அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.மக்கள் தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினாலும் தற்பொழுது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருவதால் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 2 யில் இருந்து 3 லட்சம் பேர் வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 20ஆயிரம் வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி தடுப்பூசி தட்டுபாடு காரணமாக அன்று மட்டும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், கூடுதலாக 15 ஆம் தேதி தடுப்பூசி வந்த நிலையில் நேற்று மீண்டும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 27,004 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தமிழகத்தில் 1,10,34,270 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கும் நிலையில் அதில் சென்னையில் மட்டும் தற்போது வரையும் 22,52,361  தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. 
 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு