போலீசுக்கு தண்ணி காட்டும் வக்கிர பேச்சு மதன்.. தீவிரமாக தேடுவதாக காவல் ஆணையர் தகவல்.

Published : Jun 17, 2021, 12:28 PM IST
போலீசுக்கு தண்ணி காட்டும் வக்கிர பேச்சு மதன்.. தீவிரமாக தேடுவதாக காவல் ஆணையர் தகவல்.

சுருக்கம்

தலைமறைவாக உள்ள யூடியூபர் மதனின் மனைவியை கைது செய்துள்ளோம், மேலும் மதனையும்  தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என  சென்னை காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

தலைமறைவாக உள்ள யூடியூபர் மதனின் மனைவியை கைது செய்துள்ளோம், மேலும் மதனையும்  தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என  சென்னை காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டை பகுதியில் கடந்த மாதம் உடல்நலிவுற்று மனநிலைப் பிறழ்வுடன் கண்டுபிடிக்கப்பட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாபர் அலி என்பவருக்கு உரிய சிகிச்சை அளித்து அவரது குடும்பத்தினருடன் இணைத்து வைக்கும் நிகழ்வு காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.  

இதனை தொடர்ந்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, மொத்தம் 65 என்ஜிஓ-வுடன்  நாங்கள் தொடர்பு வைத்துள்ளோம். இந்த நிலையில் அந்த அமைப்புகள்  வேலை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அன்பில் பாதை, கருணை உள்ளங்கள் போன்ற  அமைப்பு மூலம் இவரை கண்டறிந்து , அவரை பாதுகாத்து வந்தார்கள், இன்று அவருடைய அண்ணனிடம் ஒப்படைக்க பட்டுவிட்டார் என்றார்.

தற்போது, யூடியூபர் மதன் மனைவியை கைது செய்துள்ளோம்.  கணினி உட்பட அவருடைய வீட்டை சோதனை செய்து வருகிறோம். மேலும் தலை மறைவாக உள்ள மதனை தீவிரமாக தேடி வருகிறோம் விரைவில் கைது செய்யப்படுவார் என்றார். மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கு குறித்து விசாரணை சென்று கொண்டிருக்கிறது. அவருடைய பெயில் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. ஆதாரங்களை வைத்து அடுத்து என்ன செய்வது என்று பார்க்க வேண்டும் என்றார்.
 

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?