தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள்... பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என நீதியரசர் ஏ.கே ராஜன் அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jun 17, 2021, 12:13 PM IST
Highlights

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த 14 ஆம் தேதி  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.  

தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என நீட் தேர்வு தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏகே ராஜன் தகவல் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த 14 ஆம் தேதி  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் குழுவின் உறுப்பினர்கள் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சட்டத்துறை செயலர் கோபி ரவிகுமார், பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, சமூக சமத்துவத்துகான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், கல்வியாளர் ஜவஹர் நேசன்,  மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் ஆகியோர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.ஜே.ராஜன்,  நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது என்றும் அது குறித்த தகவல்களை சேகரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளோம் என்றும், இந்த குழுவில் இடம்பெற்றுள்ள 8 பேரின் கருத்தும் நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது என்பதுதான் எனவும்,  அரசு ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது, எனவே நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதை குறித்து இறுதிகட்ட அறிக்கையில் கூறப்படும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பொதுமக்களும் தங்களுடைய கருத்தை தெரிவிக்க ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் வைக்கப்பட்டுள்ள தனி பெட்டியில் வரும் 23ஆம் தேதிக்குள் நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதா, இல்லையா, அல்லது அது எந்த மாதிரியான பாதிப்புகள் என்பதை கருத்தாக தெரிவிக்கலாம் என, தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் மேலும், இந்த குழு வரும் திங்கட்கிழமை காலை மீண்டும் கூடவுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!