சம்பாதித்து வைத்த மொத்த பெயரையும் கோட்டைவிட்ட முதல்வர் ஸ்டாலின்.. அடித்து நொறுக்கிய பாமக..!

By Ezhilarasan BabuFirst Published Jun 17, 2021, 11:39 AM IST
Highlights

இன்று ஆட்சியில் இருக்கும் இவர்கள் கடந்த ஆண்டு அதிமுக அரசு மதுக்கடைகளை திறந்த போது போராட்டம் நடத்திவிட்டு இன்று அவர்களே மதுக்கடைகளை திறந்துவிட்டிருக்கின்றனர். இத்தனை நாள் அமைதியாக இருந்து போல இன்னும் 15 நாட்கள் அமைதியாக இருந்திருக்கலாம். 

ஊரடங்கு சமயத்தில் மதுக்கடைகள் திறந்திருப்பதை கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.சென்னை தி நகரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தின் முன்  பாமக இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சமூக இடைவெளியை பின்பற்றி 10 பேர் கலந்து கொண்டனர். 

அப்போது மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து  பதாகைகளை ஏந்தியபடி பாமகவினர் கோஷமிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. மூர்த்தி, மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனா காலத்தில் மதுகடைகளை திறந்து உள்ளனர். இன்று ஆட்சியில் இருக்கும் இவர்கள் கடந்த ஆண்டு அதிமுக அரசு மதுக்கடைகளை திறந்த போது போராட்டம் நடத்திவிட்டு இன்று அவர்களே மதுக்கடைகளை திறந்துவிட்டிருக்கின்றனர். இத்தனை நாள் அமைதியாக இருந்து போல இன்னும் 15 நாட்கள் அமைதியாக இருந்திருக்கலாம்.

ஆனால் யாருடைய அறிவுறுத்தலையும் கேட்காமல் மதுக்கடைகளை திறந்திருக்கின்றனர், இதனை கண்டித்து பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடந்து வருகிறது. தங்களுடைய முடிவை மறுபரீசிலனை செய்து மதுக்கடைகளை  மூட வேண்டும் என்றார். தமிழக முதல்வர் பிரதமரை சந்திப்பது மரியாதை நிமித்தமானதாக இருக்கலாம், திட்டங்கள் குறித்து பேசலாம் அப்படியான சூழலில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை கேட்டு முறையாக பெற  வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  

 

click me!